[ad_1]





இந்திய கடலோரப் காவல்படையால் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களை காவல்படை அதிகாரிகள் நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து மீனவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மீனவத் தலைவர்களின் தன்னிச்சையான முடிவால் மீனவர்கள் அதிர்ச்சி.

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிசூடு நடத்தியதில் பிச்சை, ஜான்சன் ஆகிய இரு மீனவர்களும் காயமடைந்தனர். காயமடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மீனவர்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என இந்திய கடலோரக் காவல்படையினர் மறுப்பு தெரிவித்தனர்.



 

இந்நிலையில் நேற்று மாலை மீனவர் சங்க நிர்வாகிகளை சந்தித்த மண்டபம் கடலோரக் காவல்படை அதிகாரிகள் மீனவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்தனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காது என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்த அமைச்சர் மணிகண்டன் ஆறுதல் கூறினார். அப்போது இந்திய கடலோரக் காவல்படையினருக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர், காயமடைந்த மீனவர்களை வந்து பார்க்காத கடலோரக் காவல்படை அதிகாரிகளின் செயலை வன்மையாக கண்டித்தார்.

இதையடுத்து, மண்டபம் கடலோரக் காவல்படை இணை கமாண்டர் ஆங்கூர், உதவி கமாண்டர் ராஜூசங்கர் ஆகியோர் ராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் இருவரையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், கடலில் நடந்த சம்பத்தையும் கேட்டறிந்தனர். அவர்கள் வந்து சென்ற சில மணி நேரத்தில் இந்திய கடலோரக் காவல் படையினரை கண்டித்து தாங்கள் நடத்த உள்ள கண்டன ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தப் போராட்டம் ஆகியவற்றை வாபஸ் பெறுவதாக திடீரென அறிவித்தனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மற்றும் இந்திய கடலோரக் காவல்படையினரின் தாக்குதல்களை மீனவர்கள் தொடர்ச்சியாக சந்தித்து வரும் நிலையில் அதற்கு பலத்த எதிர்ப்பினை காட்ட வேண்டும் என மீனவர்கள் எண்ணியிருக்கும் வேலையில் மீனவர் சங்கத் தலைவர்கள் சிலர் தன்னிச்சையாக போராட்டத்தை வாபஸ் பெற்றிருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியையும் தலைவர்கள் மீது வெறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");