[ad_1]





புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக்கழக ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால், 4-வது நாளான இன்று சமைத்து உண்ணும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.




புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, அக்டோபர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி, அதில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த நவம்பர் 18-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மூன்றாவது நாளான நேற்று (20.11.2017) இரவு, நிர்வாக இயக்குநர் குமார் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, பேருந்துகளை இயக்கப்போவதாக நிரந்தர ஊழியர்கள் அறிவித்தனர்.



ஆனால், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை தினக்கூலியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக எதுவும் அந்த அறிவிப்பில் வெளியாகவில்லை. அதனால், ஒப்பந்த ஊழியர்கள் அந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதேபோல, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பேருந்துகளை இயக்க விடமாட்டோம் என்று போராட்டத்தைத் தொடர்ந்தனர். அதன்படி, ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் காரணமாக 4-வது நாளான இன்றும் புதுச்சேரி அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளித்து, நிரந்த ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பேருந்துநிலையம் பின்புறம் இருக்கும் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில், ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் அங்கேயே சமைத்து உண்ணும் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர். புதுச்சேரி அரசுப் பேருந்துகள், தொடர்ந்து 4-வது நாளாக இயக்கப்படவில்லை. அதேசமயம், புதுச்சேரியிலிருந்து கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வழக்கம்போல தனியார் மற்றும் தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. 


 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");