[ad_1]
மதுரை மேலூரை அடுத்து உள்ளது கேசம்பட்டி கிராமம். சோலையாய் காட்சியளிக்கும் இந்தக் கிராமம் விவசாயத்துக்கு பெயர் பெற்றது. இங்கு விளையும் பொருள்கள் பல இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த செம்மண் கிராமத்து விவசாயி தெய்வம் அதே கிராமத்தில் சின்ன டீக்கடை ஒன்று நடத்திவருகிறார். இவர் வளர்த்த ஆடு ஒன்று சில மாதங்களுக்கு முன் குறைமாத குட்டி ஒன்றை ஈன்று இறந்தது. இதனால் குறைமாத ஆட்டுக்குட்டிக்கு பசும்பாலை பால் டப்பா மூலம் வழங்கி காப்பாற்றிவந்தார். இந்நிலையில், அவர் கடையில் வளர்த்த நாயும் குட்டிகளை ஈன்று நாய் குட்டிகளுக்குப் பால் கொடுத்துவந்த நிலையில் நாளடைவில் ஆட்டுக்குட்டிக்கும் பால் கொடுக்க ஆரம்பித்துள்ளது .
திடீர் என்று ஒரு நாள் ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுத்த காட்சியைக் கண்டுள்ளார் டீக்கடை முதாலாளி தெய்வம். இந்தக் காட்சியைக் கண்டு கண்கலங்கி அழுவிட்டதாகவே கூறுகிறார். மனிதர்கள் இடையே பல பாகுபாடும், வேறுபாடும் இருக்கும்போது இந்த ஜீவன்களிடம் இப்படி ஒரு பரிமாற்ற உணர்வு இருப்பதை நினைத்து பெருமைப்பட்டு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இவரது டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இந்தக் காட்சியைக் கண்டு மனம் உருகிச் செல்கின்றனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப் என்று சமூக வளைதளங்களிலும் பரவ ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டுக்குட்டிக்குப் பால் கொடுத்த நாய்! கண் கலங்கிய முதலாளி !
TAGS :
COMMENTS