[ad_1]
Chennai: வி.சாந்தாராம் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட கலைஞன். இந்தியாவில் சினிமா எடுக்க ஆரம்பித்த காலத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்து வந்தனர். ஆனால் அதை உடைத்து பெண் கதாபாத்திரங்களில் பெண்களையே நடிக்க வைத்தார்.
மெளனப்படக் காலத்திலேயே படங்களை இயக்கத் தொடங்கினார். இந்தி, மராத்தி மற்றும் தமிழிலும் படங்களை எடுத்துள்ளார். 1936-ல் இவர் இயக்கிய 'அமர் ஜோதி' என்ற திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சமூகக் கருத்துகளை திரைப்படங்களின் வழியே கூறியவர். பாலியல் தொழிலிலிருந்து விடுபட நினைக்கும் பெண்களின் வாழ்க்கை, இந்து-முஸ்லிம் ஒற்றுமை , வயதானவர்கள் இயம் பெண்களை திருமணம் செய்தால் பெண்கள் அவர்களை விவாகரத்து செய்தல் போன்றவற்றை தன் படங்களின் வழியே கூறினார். 'ஜனக் ஜனக் பாயல் பாஜே' என்ற இந்தியாவின் முதல் கலர்படத்தை எடுத்ததும் சாந்தாராம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
1957-ல் அவர் இயக்கிய `தோ ஆன்கி பாரா ஹாத்' என்ற திரைப்படத்திற்கு வெனிஸ் திரைப்பட விழாவில் 'வெள்ளிக் கரடி' விருது பெற்றது. இவரது திரைத்துறை சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்ம விபூஷனும், தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கி கெளரவித்துள்ளது. கலை எப்போதும் சமூக அவலங்களிலிருந்து மக்களை மீட்டெடுத்து மேம்படுத்தும். அத்தகையை கலையை மிகுந்த பொறுப்புடன் கையாண்டு மக்களிடம் சேர்த்த மகத்தான கலைஞர் வி.சாந்தாராம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
முதன் முதலில் பெண்களை திரைப்படங்களில் நடிக்கவைத்த இயக்குநர் வி.சாந்தாராம் பிறந்தநாள்
TAGS :
COMMENTS