[ad_1]
மழைகொஞ்சம் விட்டது போல் இருக்கிறது. நேற்றும், நேற்றுக்கு முந்தைய இரவுகளும், அதற்கு முந்தைய இரவுகளும் சாலைகளில் விடிய, விடிய நின்றவர்கள் பற்றி கொஞ்சம் பார்ப்போம். 'அவர்கள் சாலைகளில் ஏன் நின்றார்கள்?' என்ற கேள்விக்கு ஒற்றை வரியில் பதில் சொல்லி விடலாம். அப்படி அவர்கள் நின்றதால்தான், மற்றவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குச் செல்ல முடிந்தது. அன்று சென்னையை பாதுகாப்பாக நம்மிடமே திருப்பி ஒப்படைத்தவர்கள் பற்றியும் கொஞ்சம் பேசித்தான் ஆகவேண்டும். அதே குண்டும், குழியுமான ஏற்ற- இறக்க சாலைகள்தான். ஆனாலும் அது நமக்குத் திரும்பவும் கிடைத்தது மக்களே!. அவர்களில் ஒருசிலரைப் பற்றிப் பார்ப்போம். சென்னை அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனராக இருப்பவர் டாக்டர் சுதாகர். மழையில் ஊறிப்போய்க் கிடந்த ஏராளமான மரங்கள், அண்ணாநகர் காவல் மாவட்ட சாலைகளில் விழுந்து கிடந்தது. மரங்கள் விழுந்தது, இரவு நேரம். மழையும் விடவில்லை. மாநகராட்சிப் பணியாளர்கள், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர் என பலரும் விழுந்து கிடந்த மரங்களை அகற்றி, வேறு இடங்களுக்குக் கொண்டு சென்றனர். துணை கமிஷனரான டாக்டர் சுதாகரும், மழையில் நனைந்தபடி அந்த மரங்களை அகற்றிக் கொண்டிருந்தார். இவர்கள் கொஞ்சமும் தயங்காமல் அப்படிச் செய்ததால்தான் பேருந்துகளும், மற்ற வாகனங்களும் அந்தப் பகுதியில் தடையின்றி போக முடிந்தது. மரங்களை அகற்றும் போது, கீழே கிடந்த மின்சாரக் கேபிள்களையும் கவனித்து அப்புறப்படுத்தியதால், கொடுங்கையூர் போன்ற அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. சாலையில் நடந்தவர்கள், 'ஷாக்' அடிக்காமல் தப்பித்தனர். அயனாவரம் அஞ்சலகம் அருகேயுள்ள திருமலைராஜா பிரதான சாலையிலும் இதேபோல் மரங்கள் விழுந்து கிடந்தன. பெரிய மரம் ஒன்று, பழமையான வீட்டின் மீது அப்படியே சாய்ந்து விழுந்தது. மரத்தை அப்புறப்படுத்த வேண்டியது முதல் வேலை. அப்படி அகற்றும்போது, அந்த வீடும் கூடவே சாய்ந்து விட்டால் பிரதான கொன்னூர் நெடுஞ்சாலையின் மொத்தப் போக்குவரத்தும் மரம் போலவே படுத்துக் கொள்ளும். வீடும் சாயாமல், மரமும் அங்கு இல்லாமல் அந்த மழை இரவில், அத்தனை அரசு ஊழியர்களும் கவனமாக வேலை பார்த்தனர். உள்ளூர் சமூக ஆர்வலர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். போக்குவரத்துப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமந்த்குமார், மரங்களோடு மல்லுக்கட்டிய வகையில் அவர் போட்டிருந்த வெள்ளைச் சட்டை மண் நிறத்துக்குப் போய்விட்டது.
மழை விட்டு, விட்டுப் பெய்யும் என்கிறது வானிலை அறிக்கை. அந்த மழை இப்போது விட்டிருக்கிறது. இத்தனை நாள்கள், ஆட்சியில் உள்ளோர் செய்து முடிக்காத வேலையை சில மணிகளில் மொத்தமாக செய்து முடிக்க வாய்ப்பில்லை. ஆனாலும், முடிந்த வரை, தரை காய்ந்திருக்கும் போதே மழையை எதிர்கொள்ள அரசுத்தரப்பு தயாராவது நல்லது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அந்த மழைக்கால இரவுகளில் என்ன நடந்தது... ’போக்குவரத்தை சீர்செய்தவர்கள் பற்றித் தெரியுமா?’
TAGS :
COMMENTS