[ad_1]
”பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல், தமிழக அரசு மெளனம்காக்கிறது” என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் புதிய மனுத்தாக்கல் செய்திருந்தார். வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி, தான் வாங்கித்தந்தது என்பது நிரூபிக்கப்படவில்லை என்றும், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், தனக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதுகுறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு தூக்குத்தண்டனையை உறுதிசெய்த முன்னாள் நீதிபதி தாமஸ், பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை விவகாரத்தில் கருணைகாட்டுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடந்த 18-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதுபோல, பேரறிவாளனின் விடுதலைக்கு ஆதரவாகப் பல தரப்பினரும் குரல்கொடுத்துவருகின்றனர்.
தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு, விடுதலை அளிக்கவேண்டிய தருணம் இதுவென வழக்கின் சி.பி.ஐ விசாரணை அதிகாரி முதற்கொண்டு தண்டனையை உறுதிசெய்த நீதிபதி வரை அனைவரும் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல், தமிழக அரசு மெளனம்காத்துவருகிறது” என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
”பேரறிவாளன் விவகாரத்தில் அரசு மெளனம்காக்கிறது”: ஸ்டாலின் குற்றச்சாட்டு
TAGS :
COMMENTS