[ad_1]
நெல்லை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழைப் பொழிவு அதிகமாக உள்ளது. மாஞ்சோலைப் பகுதியில் பெய்யும் தொடர் மழைக் காரணமாக வேங்குநாயக்கர் அணை, செங்கல்தேரி, கொசுதலை ஆறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மணிமுத்தாறு அணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கு குளிப்பது ஆபத்தானதாக மாறியது. அதனால் வனத்துறையினர், மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்குத் தடை விதித்தனர். சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்குச் செல்லவே அனுமதிக்கப்படவில்லை. அதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அருவியில் குளிப்பதற்கு நேற்று முதல் தடைவிதிக்கப்பட்ட நிலையில், அருவிக்குத் தண்ணீர் வரக்கூடிய மலைப் பகுதியில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் இன்றும் அனுமதிக்கப்படவில்லை.
தொடர் மழைக் காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை!
TAGS :
COMMENTS