[ad_1]

'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் துல்கர் சல்மான். மம்முட்டியின் மகனான இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்தின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் ரொம்ப பேமஸான துல்கர், சமீபத்தில் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் 'சோலோ' படத்தில் நடித்தார்.



இவரது நடிப்பில் அடுத்ததாகத் தமிழில் 'மகாநதி' திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் ஜெமினி கணேஷன் கதாபாத்திரத்தில் துல்கர் நடிக்கிறார். இதற்கிடையில் துல்கரின் அடுத்தத் தமிழ் படம் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மா நடிக்கும் புதிய தமிழ் படத்தைத் தேசிங் பெரியசாமி இயக்கயிருப்பதாகவும் படத்துக்குப் பெயர் 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இணையத்தில் தகவல் வருகிறது. இது ரொமான்டிக், ஆக்‌ஷன் படமாக உருவாகயிருக்கிறதாம். ஆனால், இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தெலுங்கில் ஹிட் அடித்த 'பெல்லி சுப்புலு' படத்தின் கதாநாயகிதான் ரிது வர்மா. இவர் தமிழில் தற்போது கெளதம் வாசுதேவ் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார்.