[ad_1]





Chennai: மெர்சல் திரைப்படம் தேசியளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் விஜய் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 


தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் அதை நீக்க வேண்டும் என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை குற்றம்சாட்டினார். பின்னர் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் மெர்சல் திரைப்படத்தை சாடினர். இதனால் இணையம் போர்களம் ஆனது. பா.ஜ.க-வுக்கு எதிராக விஜய் ரசிகர்கள், அரசியல் கட்சிகள் என எல்லா பக்கமும் கண்டனங்கள் எழுந்தன. மெர்சல் தயாரிப்பு குழு மூத்த பா.ஜ.க தலைவர்களிடம் பேசி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்நிலையில் மெர்சல் படத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அறிக்கையில் ‘தீபாவளி விருந்தாக வெளியான மெர்சல் திரைப்படம் வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரைப்படத்துக்கு சில எதிர்ப்புகள் வந்தன. இதற்குப் பதிலளிக்கும் வகையில் கலையுலகை சார்ந்த நண்பர்கள், நடிகர்கள், நடிகைகள், திரையுலக அமைப்புகள், தயாரிப்பாளர் சங்கம், நண்பா நண்பிகள், ஊடக நண்பர்கள் என அனைவரும் ஆதரவளித்தனர். அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்