[ad_1]

Thoothukudi: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், சரக்குகளைக் கையாள்வதில் தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளது. 





இதுகுறித்து தெரிவித்த துறைமுக சேர்மன் ஜெயக்குமார், ‘’தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், கடந்த 11-ம் தேதி 1 லட்சத்து 65 ஆயிரத்து 189 மெட்ரிக் டன் சரக்குகளை ஒரே நாளில் கையாண்டுள்ளது. இது, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி, ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட  சாதனை அளவான 1 லட்சத்து 61 ஆயிரத்து 935 மெட்ரிக் டன்-ஐ விட அதிக சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. அனல் மின் கரி, தொழிலகக் கரி, உரம், உர மூலப் பொருள்கள் மற்றும் இதர சரக்குகள் கையாளப்பட்டதன் மூலமும் மற்றும் அதிக அளவில் அர்ப்பணிப்புடன் சேவை, மிகுதியான தொழில் அக்கறை ஆகியவற்றால்தான் தேசிய அளவில் இச்சாதனை புரியமுடிந்தது. அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், துறைமுகத் தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டு முயற்சியால்தான் இது சாத்தியமானது’ என்றார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");