[ad_1]
பள்ளி கட்டிடம் திறந்து 4 நாட்களில் ஒழுகியதால் மக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தச் சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சுண்டிபள்ளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி உள்ளது. பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஊரக வளர்ச்சிதுறை மூலம் குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 11.80 லட்ச ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறைகளை கொண்ட புதிய பள்ளிகட்டிடம் 2016 & 2017 ஆண்டில் கட்டப்பட்டு கடந்த 2-ம் தேதியன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு கொறடா, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ஆகியோர் திறந்துவைத்தனர். 2-ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெற்றன. தற்போது வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கட்டிடத்தில் மேற்கூரையில் இருந்து மழைதண்ணீர் ஊறி உள்ளே தண்ணீர் ஒழுகி ஆரம்பித்துள்ளன. இதனால் பள்ளி மாணவர்கள் பழைய கட்டிடத்திற்கு இடம்பெயர்ந்து படித்தனர்.
இதனையறிந்த பெற்றோர்கள் கட்டிடம் கட்டிய ஒரு வாரத்திலேயே இப்படி இருந்தால் எப்படி பள்ளி கட்டிடம் நாளடைவில் இடிந்து விழுந்திடும். எங்கள் குழந்தைகளின் கதி என்ன என கோரி சுண்டிபள்ளம் கிராம பொதுமக்களும் பள்ளி கட்டிடத்தை உடனே சீரமைக்க வேண்டும் என கோரி சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், ஜெயங்கொண்டம் ஒன்றிய ஆணையர் அமிர்தலிங்கம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு வாரத்தில் தண்ணீர் ஒழுகாமல் இருக்க மேற்கூரையை சரி தருகின்றோம் என உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சென்னை கும்பகோணம் சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை நீர் ஒழுகிய திறந்து ஒரு வாரமே பள்ளி கட்டிடம்..! சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
TAGS :
COMMENTS