[ad_1]







நாக்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் 300 விக்கெட்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.


கொல்கத்தாவில் நடந்த இந்தியா- இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இரண்டாது டெஸ்ட் போட்டி நாக்பூரில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் கருணாரத்தேன 51 ரன்னும் சண்டிமால் 57 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். இலங்கை அணி 205 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும் இசாந்த் சர்மா, ஜடேஜா தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர் ராகுல் 7 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு தொடக்க வீரர் முரளி விஜய் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இவர் 11 பவுண்டரி ஒரு சிக்சருடன் 128 ரன்கள் குவித்தார். புஜாரா 143 ரன்னும் கேப்டன் கோலி 213 ரன்னும் அடித்தனர். ரஹானே 2 ரன்னில் வெளியேறினாலும் இந்திய வீரர்கள் ரன்குவிப்பில் ஈடுபட்டனர். ரோஹித் சர்மா 102 ரன்கள் குவித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் 610 ரன்கள் குவித்த இந்தியா டிக்ளேர் செய்தது.

405 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். முதல் இன்னிங்ஸில் கலக்கிய அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸிலும் கலக்கினார். இலங்கை அணியில் கேப்டன் சண்டிமால் மட்டுமே அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. இலங்கை அணி 166 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


அதேநேரத்தில் அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டெனிஸ் லல்லி சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");