[ad_1]


திருச்சி மத்திய சிறையில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.  அதில் அவ்வப்போது கைதிகளை, அவர்களின் மீதான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த நவம்பர் 10-ம் தேதி திருச்சி சிறையில் இருக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பு என்கிற செல்வம், சத்யராஜ் மற்றும் மேல்கரை ஐயப்பன் உள்ளிட்ட மூன்று கைதிகளை வழக்கு விசாரணை சம்பந்தமாக நாகப்பட்டினம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அன்று மாலையே வழக்கு விசாரணை முடிந்து மீண்டும் திருச்சி சிறைக்குத் திரும்ப அழைத்து வரப்பட்டு, பலகட்ட சோதனைக்குப் பிறகு சிறைக்குள் அடைக்கப்பட்டனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில், சிறைக்காவலர்கள் கைதிகளின் அறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து சிறிய அளவிலான கஞ்சா பொட்டலங்களும், போதை மாத்திரைகளும் இருப்பது தெரியவந்தது. அடுத்து அவற்றை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்ததுடன்,  இதுகுறித்து பொறுப்பு சிறைப் பாதுகாவலர் ராஜேந்திரன், திருச்சி கே.கே. நகர் போலீஸில் புகார் கொடுத்தனர்.

அதையடுத்து வழக்குப் பதிந்து கே.கே.நகர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். திருச்சி சிறைக்குள் கஞ்சாவும் போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.


!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");