[ad_1]
Tiruppur:
ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் உடுமலை சார்பதிவாளர் மற்றும் தலைமை எழுத்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் வில்லங்கம் போன்ற பணிகளுக்கு அதிகளவில் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு அடிக்கடி புகார்கள் சென்ற வண்ணம் இருந்திருக்கிறது.
அதனைத்தொடர்ந்து, நேற்றைய தினம் உடுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென தணிக்கை நடவடிக்கையில் உயரதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் இல்லாத ரூபாய் 59,000 தொகை அங்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தை கைப்பற்றிய காவல்துறையினர், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ரவிச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், சார்பதிவாளர் வசுந்தராதேவி மற்றும் தலைமை எழுத்தர் கெளரி ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
உடுமலைப்பேட்டையில் அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு!
TAGS :
COMMENTS