[ad_1]





கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரில் செங்கல்பட்டைச் சேர்ந்த பா.ஜ.க. மாநிலச் செயற்குழு உறுப்பினர் ‘ரங்கா’ ரவி மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 




இவர் செங்கல்பட்டில் திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருபவர் ’ரங்கா’ ரவி. அவரின் தந்தை முனிவேலு, செங்கல்பட்டு திருமலை தியேட்டரின் டிக்கெட் கவுன்டரில் வேலை செய்து வந்தார். அதன்பின்னர் விறகு வியாபாரம் செய்து வந்தவர். செங்கல்பட்டு கிளைச் சிறைக்கு காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்ய ஆரம்பித்து அவர்களது வியாபாரத்தை விரிவுபடுத்தினர். அதைத் தொடர்ந்து முனிவேலுவின் மகன்கள் வட்டித் தொழிலை செய்ய ஆரம்பித்தார்கள். முனிவேலுவின் இளைய மகனான ’ரங்கா’ ரவி,  திருமண மண்டபம், ஹோட்டல் எனப் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் பெரிய தொகைகளைக் கந்துவட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டிக்குக் கொடுப்பார். பா.ஜ.கவின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவராக முன்னர் பதவி வகித்த ரவி, தற்போது அக்கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். 

செங்கல்பட்டில் உள்ள பந்தல், சேர் ஆகியவற்றை வாடகைக்கு விடும் ’ஷாவி’ என்ற கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் ரவி கைது செய்யப்பட்டிருக்கிறார். கடையின் உரிமையாளர் வாங்கிய பெரிய தொகைக்கு, பலமடங்கு வட்டி மட்டுமே கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு நகரக் காவல் ஆய்வாளர் லாமேக்-கை தொடர்புகொண்டு கேட்டபோது ’புகாரின் பேரில் ரவியை விசாரித்து வருகிறோம். டாக்குமென்ட் எதுவும் இல்லை. இதுதொடர்பாக ரவி மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. விசாரணையின் முடிவில்தான் முழுவிவரம் தெரியவரும்’ என்றார்.  


 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்