[ad_1]
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னுடைய முடியை அளித்ததோடு நிறுத்திவிடாமல் தற்போது தன்னுடைய உடல் உறுப்புகளையும் மற்றவர்களுக்கு தானமாக வழங்கியுள்ளார் நடிகை ஆர்த்தி.
பிக்பாஸில் ஃபேமஸானவர்களுள் ஒருவர் ஆர்த்தி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் தன்னுடைய முடியைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கினார். இன்று அவருடைய பிறந்தநாள். தன்னுடைய பிறந்தநாளை பயனுள்ளதாக்க வேண்டும் என்று எண்ணிய ஆர்த்தி, இன்று தன்னுடைய உடல் உறுப்புகளை தானமாக அளித்துள்ளார்.
Saambala pogaama 4perukku samplea povom...
"Let's donate organs... "
Spread love... Love u all pic.twitter.com/frTW3GQhdv
— Actress Harathi (@harathi_hahaha) November 8, 2017
மேலும், நான் இறந்த பிறகு சாம்பலா போகாமா.. நாலு பேருக்கு சேம்பிளா போவோம் என ஸ்டேட்டஸ் போட்டு உடலுறுப்பு தானம் செய்த சான்றிதழையும் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிறந்த நாள் வாழ்த்துகளோடு அவரது நல்லெண்ணத்திற்கும் ட்விட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
பிறந்தநாளில் உடலுறுப்பு தானம் செய்த பிக்பாஸ் நடிகை..!
TAGS :
COMMENTS