[ad_1]
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 4 -ம் ஆண்டு துவக்கவிழா திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. மூன்று வருடங்களுக்கு முன்பு கட்சி துவங்கப்பட்ட அதே திருச்சியில் நடைபெறும் விழா என்பதால் கூடுதலாக கவனம் செலுத்தியிருந்தார்கள்.
அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் த.மா.கா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணைத் தலைவர்கள் ஞானதேசிகன், கோவை தங்கம், மாநில கொள்கைப்பரப்புச் செயலர் என்.ரவி, மாநிலச்செயலர் ஆர்.தர்மராஜன், மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன், திருச்சி மாவட்டத் தலைவர்கள் கே.வி.ஜி. ரவீந்திரன், டி. குணா, நந்தா கே. செந்தில்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேடையில் பேசிய ஜி.கே.வாசன்,
“அகங்காரமற்ற, நேர்மையான, அன்புக்கும், பாசத்துக்கும் அடிமையான கூட்டம் இது. வளமான, வலிமையான தமிழகத்தை உருவாக்கும் வகையிலான அடித்தளத்தையும், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியையும் ஏற்படுத்தும் கூட்டம் இது. எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் த.மா.காவை முதல் நிலை இயக்கமாக மாற்றும் தொண்டர்களை கொண்ட கட்சி என்பதில் சந்தேகமில்லை. வேறு எந்தக் கட்சிக்கும் த.மா.காவினர் சளைத்தவர்கள் அல்ல அந்த அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கட்சி தொடங்கிய மூன்றாண்டுகளில் சுனாமி, சூறாவளி, புயல் போன்ற பல்வேறு நிலைகளையும் கடந்து, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதையும் யூகிக்க முடியாத நிலையிலும், தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும் கட்சியாக த.மா.கா விளங்குகிறது.
மேலும் எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத ஒரே கட்சியாகவும், அனைத்துத் தரப்பினரிடம் ஏகோபித்த ஆதரவை ஒருங்கே பெற்ற கட்சியாகவும் உள்ளது. உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்படுத்துவோம். எதிர்காலத்தில் இக்கட்சிக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வெகுவாக இருப்பர். கடந்த மூன்றாண்டுகளில் மக்கள் எண்ணங்களைப் தொடர்ந்து பிரதிபலித்து வந்திருக்கிறது த.மா.கா. எனவே தமிழகத்தில் வருங்காலம் த.மா.காவுக்கு வசந்த காலம்தான்.
அனைத்துத் தரப்பினரும் நம்மை உற்று நோக்குகிறார்கள். பணத்துக்காக நடத்தப் படும் இயக்கம் அல்ல . இதுவே த.மா.காவின் சாதனை. நம்மைப் புறக்கணித்தவர்கள், ஏளனம் பேசியவர்கள் உண்டு. தூற்றியவர்கள் உண்டு. நண்பர்கள் போல பழகி துரோகிகளாக மாறியவர்கள் எல்லாம் விலாசம் இல்லாமல் போனார்கள் என்பது வரலாறு என்றவர்.
மத்திய அரசின் தவறான கொள்கைகளால் மக்கள் பெரும்துயரத்துக்கு ஆளானார்கள். மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள்., ஜி.எஸ்.டி வரியால் மக்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். இவர்களால். கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியவில்லை, பணமதிப்பிழப்பால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இத்திட்டம் முன்னேற்பாடில்லாத திட்டம். இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மீளமுடியாத துன்பத்துக்கு ஆளாகினர்.
தாங்கள் செய்த தவறுகளை எண்ணிதாம் மத்திய அரசு சில பொருட்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளது. இதுபோன்று நிதிக்குழுவை கலைத்தது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் துன்பமடைந்துள்ள நினைத்தால் வரி ஏற்றுவது, இறக்குவது ஜனநாயகத்துக்கு ஏற்ற நடைமுறை இல்லை. விரிவிதிப்பால் விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆனால் விலை உயர்வு அதிகரித்துள்ளது. அதைத் தமிழக அரசும் தடுக்கவில்லை. பல்வேறு காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்து விட்டது.
தமிழக அரசைப் பொறுத்தவரை தன்னுடைய அதிகாரத்தை மத்திய அரசிடம் இழந்திருக்கிற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை. சர்க்கரை விலை அதிகரித்துள்ளது, மின்சாரம், பால்வளம், போக்குவரத்து , கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளும் முடங்கியுள்ளன.
மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை, வெள்ள நீர் வழிய இடமில்லை. இவற்றுக்கெல்லாம் காரணம் தமிழகத்தில் திராவிடக் ஆட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்ததுதான். நதிநீர் பிரச்னைகளில் பா.ஜ.க தீர்வு காணவில்லை, காவிரிப் பிரச்னையில் இரு திராவிட கட்சிகளும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளன. மதுவில்லா தமிழகம், வேலைவாய்ப்பு , மருத்துவம், வேளாண்மை, கல்விக்காக த.மா.கா செயலாற்றும். த.மா.கா ஆண்ட கட்சியும் அல்ல, ஆளும் கட்சியும் அல்ல. ஆளப் போகிற கட்சி ” என்றார் வாசன்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
தமிழகத்தை ஆளப்போகும் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ்! - ஜி. கே. வாசன்
TAGS :
COMMENTS