[ad_1]
பயிர்க்காப்பீட்டுக்காக வங்கிக்கணக்குத் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி காளையார்கோவிலில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் மாவட்டக் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் எல்லையானது மறவமங்களம், நாட்டரசங்கோட்டை, திருவேலன்குடி போன்ற ஆறுகிராமங்களை உள்ளடக்கியது. சுமார் 10 ஆயிரம் விவசாயிகள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். கடந்தஆண்டு பயிர்க்காப்பீடு செய்தவர்களுக்கு, இன்சூரன்ஸ் கிடைக்காத நிலை இருக்கிறது. இந்நிலையில் இந்தாண்டு பயிர்க்காப்பீடு செய்யலாம் என அரசு அறிவித்தது. இதற்காக, கிராமப்புறங்களில் உள்ள தொடக்க வேளாண்மை வங்கிகளில் கணக்கு வைத்திருந்தவர்கள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் கணக்குத் தொடங்க வேண்டும் என்றும், அதற்கான காலக்கெடு நவம்பர் 30-ம்தேதி எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் வரவால், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் கூட்டம் அலைமோதுகிறது. சிறப்பு கவுன்டர்கள் தொடங்கினால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும் என்கிறார்கள் விவசாயிகள். இது குறித்து சிவகங்கை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ’வங்கியில் பணியாளர் எண்ணிக்கை குறைவு என்பதால், ஒரு நாளைக்கு 200 கணக்குகள் மட்டுமே தொடங்க முடிகிறது. அதனால், கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை’ என்கிறார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பயிர்க்காப்பீட்டுக்காக வங்கிக் கணக்குத் தொடங்குவதில் காலதாமதம்! போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்
TAGS :
COMMENTS