[ad_1]
இந்தியாவின் தலைநகரில் நடந்துள்ள ஒரு சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 22-ம் தேதி, டெல்லியைச் சேர்ந்த நான்கு வயதுக் குழந்தையை, சக வகுப்பைச் சேர்ந்த ஒரு குழந்தை பாலியல் வன்முறை செய்ததாக வந்த செய்தி, எல்லோரையும் திகைக்கச் செய்திருக்கிறது. அந்தக் குழந்தை வெறுமனே சீண்டலில் மட்டும் ஈடுபடவில்லை. சக குழந்தையை விரலாலும் கூரிய பென்சிலாலும் மருத்துவமனைக்குச் செல்லும் அளவுக்குக் காயப்படுத்தி இருக்கிறது. காவல் துறை அந்தக் குழந்தைமீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து, இந்த வழக்கை எப்படிக் கொண்டுசெல்வது என்று புரியாமல் திணறுகிறது. இதுகுறித்து, குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக இயங்கிவரும் 'தோழமை' அமைப்பின் தேவநேயன் அவர்களிடம் கருத்து கேட்டோம்.
“இன்றைக்குக் குழந்தைகள் அவர்களுடைய பருவத்தைத் தாண்டி சில செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை இது எடுத்துகாட்டுகிறது. அந்தக் குழந்தை நடந்துகொண்ட செயல், அவனுடையதில்லை. அது ஏதோ ஒரு வழியாக அவனை சென்று சேர்ந்திருக்கிறது. அது எப்படிப் போனது? குழந்தையின் சூழல்தான் அதை முடிவுசெய்கிறது. குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? யாரோ பேசுவதை ஊடகம் வழியாகவோ, நேரடியாகவோ பார்த்திருக்கிறது. இந்த நிகழ்விலும், ஊடகம் வழியாகவோ, வீட்டிலோ, பள்ளியிலோ அந்தக் குழந்தை நிகழ்வைப் பார்த்திருக்கிறது. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அதற்குத் தயாராகி இருக்க வாய்ப்பே இல்லாத வயது இது. இதை ஆரம்பகால குழந்தைப் பருவம் என்றுதான் அழைப்போம்.
குழந்தைகள் குற்றம் செய்தால், அவர்களைச் சட்டத்துக்கு முரணாக நடந்துகொள்கிறார்கள் என்றுதான் சட்டம் சொல்கிறது. குழந்தையின் நலனை ஒட்டியே அந்த வழக்கு நடத்தப்பட வேண்டும்; தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்; இத்தகைய வழக்குகள் சிறப்பு கவனம் செலுத்தி கையாளப்பட வேண்டும் என்கிறது.
ஒரு நான்கு வயதுக் குழந்தை இப்படி நடந்துகொண்டிருப்பது பதிவுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. ஏழு வயதுக்குக் குறைவாக இருப்பவர்கள் மீது உங்களால் வழக்குப் பதியவே முடியாது. ஆனால், 'வழக்குக்காக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தோம்' என்று காவல்துறை சொல்வது தவறு. அப்படிப் பதிவுசெய்தால், இரண்டு குழந்தைகளின் சமூக வாழ்வும் எதிர்காலமும் பெரும் பாதிப்புக்குள்ளாகும். அந்தப் பள்ளியின் பெயரைச் சொல்வதுகூட தவறு. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கும் மனநல மருத்துவரால் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அந்தக் குழந்தை ஏன் அவ்வாறான செயலில் ஈடுபட்டான் என்பதைக் கண்டறிய வேண்டும். மாறாக, ஒரு குற்றவாளியை நடத்துவதுபோல அவனை நடத்தக்கூடாது” என்கிறார் தேவநேயன்.
“நான்கு வயதுக் குழந்தை தன் சக வகுப்பு குழந்தையைப் பாலியல் ரீதியாக வன்முறை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு மாடலிங்தான். அந்தக் குழந்தையை பாலியல் வறட்சிகொண்டது என்று சொல்வதோ, நோய் இருக்கிறது என்று சொல்வதோ, குற்றம் என்று சொல்வதோ சரியாக இருக்காது. வளரும் சூழல், பெற்றோர் நடந்துகொள்ளும் விதம் என்று அந்தக் குழந்தையின் சூழல் மாடலிங்தான் இது.
பொதுவாக குழந்தைகள் கணினியிலும் போனிலும் என்ன பார்க்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை திட்டமிட்டு எல்லாம் பாலியல் சீண்டல் செய்திருக்க வாய்ப்பே இல்லை. ஆணோ, பெண்ணோ பன்னிரெண்டு வயது வரை மனதளவில் முதிர்ச்சி அடையாத அறிவுதான். அதுவரை நீங்கள் சொல்வதுதான் சரி. நீங்கள் சொல்வதுதான் தவறு. குழந்தை ஓர் அறையில் இருக்கிறது; பெற்றோர் இன்னோர் அறையில் இருக்கிறார்கள் எனும்போது, அந்தக் குழந்தை என்ன செய்கிறது, என்ன பார்க்கிறது என்ற கண்காணிப்பே பெரும்பாலான பெற்றோர்களிடம் இருப்பதில்லை.
குழந்தைகளை சமூகத்தில் பொறுப்பானவர்களாக வளர்த்தெடுக்க நம் கண்காணிப்பு அவசியம். குழந்தைகள் எங்கிருந்தாலும் அவர்கள் மீது நம் பார்வை இருந்துகொண்டே இருக்க வேண்டும்” என்கிறார், கோவையைச் சேர்ந்த மனநல மருத்துவரும் அரசு மருத்துவக் கல்லூரியின் மனநலத் துறை உதவிப் பேராசிரியருமான குருமூர்த்தி.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
நான்கு வயது குழந்தை சக குழந்தையிடம் நிகழ்த்திய பாலியல் துன்புறுத்தல்... தவறு யார் மீது? - ஓர் அலசல்
TAGS :
COMMENTS