[ad_1]

Madurai: போயஸ் கார்டனில் வருமான வரித்துறை அதிகாரிகளின் ஆய்வு குறித்து கருத்து சொல்ல முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.  




மதுரையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முதன்முதலாக மதுரையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஆடம்பரமாக இல்லாமல், மிக எளிமையாகக் கொண்டாப்பட்டு வருகிறது. இதில், மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது’ என்றார்.


போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ‘அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்து வருகின்றனர். வருமான வரித்துறையானது மத்தியரசின் ஒர் அமைப்பு. இதில் நான் கருத்து கூற முடியாது. நீதிமன்ற நடவடிக்கைக்கு எவ்வாறு கருத்து கூற முடியாதோ அதைப் போன்று இதற்கும் கருத்து கூற முடியாது’ என்றார், 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");