[ad_1]
Kanniyakumari: கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதிநிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிர்மலனை 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்கிற நிதிநிறுவனத்தை நிர்மலன் நடத்தி வந்தார். அதில் சுமார் 600 கோடி வரை மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபர் நிர்மலனை மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவர், மதுரையில் உள்ள முதலீட்டாளர்கள் நலச்சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மீரா சுமதி முன்னிலையில் கடந்த 15-ம் தேதி சரணடைந்தார். தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்குமாறு கன்னியாகுமரி மாவட்டப் பொருளாதார குற்றப் பிரிவு டி.எஸ்.பி துரை தலைமையிலான போலீஸார் மனுத்தாக்கல் செய்தனர். மொத்தம் 12 நாள்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்டு மனு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் நிர்மலனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, நிர்மலனை நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னர், மத்தம்பாலை மற்றும் பளுகல் பகுதிக்கு கொண்டு சென்று விசாரணை நடக்க இருக்கிறது. நிர்மலன் உடன் அவர் மனைவி மற்றும் மூன்று தங்கைகள், ஒரு சகோதரர் உள்ளிட்டோரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் நிர்மலன் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், தனது நிறுவனத்தில் 14,000 முதலீட்டாளர்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர்தான், நிதி நிறுவனத்தில் அதிகம் பேர் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். நிதிநிறுவனத்தில் யார் யார் எவ்வளவு முதலீடு செய்துள்ளனர் என்கிற விபரத்தை, ஏற்கெனவே திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நிர்மலன் தாக்கல் செய்திருந்தார். மதுரை நீதிமன்ற வாக்குமூலத்திலும் அந்த விவரங்களை நிர்மலன் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தினால் கறுப்புப் பணம் முதலீடு செய்த முக்கியப் புள்ளிகள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. தற்போது நிர்மலனை போலீஸ் காவலில் எடுப்பதால், அவரது நிறுவனத்தில் பெரிய அளவில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்த இருக்கின்றனர். நிர்மலன் திடீரென, தனது சொத்துக்களைப் பினாமி பெயர்களில் மாற்றியிருந்தார். அந்தச் சொத்துகள் எவை என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. நிர்மலன் காவல்துறையிடம் கொடுக்கிற வாக்குமூலத்தின் அடிப்படையில், கறுப்புப் பண முதலீடுகள் குறித்து பல தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
விஸ்வரூபம் எடுக்கும் கன்னியாகுமரி நிதிநிறுவன விவகாரம்: நிர்மலனைக் கஸ்டடியில் எடுத்த போலீஸ்!
TAGS :
COMMENTS