[ad_1]

ஜி.எஸ்.டி வரி சமூகத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ள வேளையில் அதற்குப் புதுவித விரிவாக்க விளக்கமளித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.




பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டதாகப் பல்வேறு தரப்பினரும் குறைகூறிவரும் நிலையில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தொடர்ந்து கூறிவருகிறார். மேலும், இந்தியப் பிரதமர் மோடியும் ‘ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் வர்த்தகர்கள் தங்கல் வியாபாரத்தை எளிமையாக வளப்படுத்தி வருகின்றனர்’ என சமீபத்தில் பாராட்டுப் பத்திரம் வாசித்தார்.

இந்நிலையில், ஜி.எஸ்.டி வரிப் பெயருக்கு புது விரிவாக்கம் அளித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அவர் கூறுகையில், ”பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது ஒரு பேரழிவு. ஜி.எஸ்.டி என்பது ‘மிகப்பெரும் சுயநல வரி’ (Great Selfish Tax). வேலைவாய்ப்பைப் பறித்துக்கொண்டு, வணிகத்தைத் தாக்குவதுதான் ஜி.எஸ்.டி வரி” எனக் கூறியுள்ளார். மேலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்றும் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.