[ad_1]
மாநிலம் முழுவதும் தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. நாகர்கோவிலில் இரண்டு முறை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாகராஜா திடலில் வருகிற டிசம்பர் மாதம் 13-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் போன்றவர்கள் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள். இந்த விழாவிற்காக கால்கோள் விழா வருகிற 23-ம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் எட்டு அமைச்சர்க கலந்துகொண்டு நடத்துகிறார்கள்.
நாகராஜா கோயில் திடலில் அதிக அளவு பொதுமக்கள் கலந்து கொள்ளும் போது இட நெருக்கடி ஏற்படும். எனவே புத்தேரியில் உள்ள தனியார் நிலத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் எம்.பி., தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். புத்தேரியில் சுமார் 40 ஏக்கர் பரப்பிலான நிலம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக தயார் செய்யப்படுகிறது. இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஒப்புதல் அளித்தால் மட்டுமே அங்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்குமா என்கிற சந்தேகமும் அதிமுகவினரிடம் இருக்கிறது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்குமா?
TAGS :
COMMENTS