[ad_1]
சர்வதேச மதிப்பீடு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மதிப்பீட்டுப் பட்டியலின்மூலம் இந்தியப் பங்குச்சந்தையின் வர்த்தகம் உச்சத்தில் சென்றுகொண்டிருக்கிறது.
உலகச் சந்தைகளில் நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்கா-வடகொரியா இடையே நிலவிவரும் போர் பதற்றம், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியவற்றால், கடந்த சில நாள்களாக இந்தியப் பங்குச்சந்தை வீழ்ந்துகிடந்தது. ஆனால், சர்வதேச மதிப்பீடு நிறுவனமான ‘மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை’ மையம் வெளியிட்டுள்ள மதிப்பீடுமூலம் இந்தியப் பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது. இந்தியாவின் உள்ளூர் ரூபாய் மதிப்பீடை இந்நிறுவனம் உயர்த்தி அறிவித்ததால், இந்த ஏற்றம் நிகழ்ந்துள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ், 348.65 புள்ளிகள் உயர்ந்து 33,455 புள்ளிகளாக உள்ளது. அதே வேளை, தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 102.80 புள்ளிகள் உயர்ந்து 10,317 புள்ளிகளாக உள்ளது. இந்த மதிப்பீட்டுப் பட்டியல்மூலம் இந்தியாவின் மதிப்பு, 14 ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேசச் சந்தையில் உயர்ந்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சர்வதேச மதிப்பீடு நிறுவனத்தால் உயர்ந்த இந்தியப் பங்குச்சந்தை
TAGS :
COMMENTS