[ad_1]
Chennai:
''மருத்துவமனைகளின் இதயமாகச் செயல்படுபவர்கள் செவிலியர்கள். மருத்துவம் பார்ப்பது மட்டுமல்ல... நோயாளிகளிடம் அக்கறை, அரவணைப்பு என அன்பு பாராட்டுவதும் செவிலியர்களின் முக்கிய கடமை. மருத்துவமனைக்கு வந்துவிட்டால், எவ்வளவு பெரிய தனிப்பட்ட பிரச்னைகளையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு நோயாளிகளைக் கவனிப்பதில் மட்டுமே ஈடுபடுவார்கள். அவர்களுக்கும் குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்துமே இருக்கிறது. ஆனால் அரசாங்கம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும், வேலை நிரந்தரம் பற்றியும் கவனத்தில் கொள்வதே இல்லை. செவிலியர்களுக்கு, அரசாங்கம் கொடுத்த உறுதிகளை மறந்துவிட்டது. செவிலியர்கள் அரசுக்கு அதை ஞாபகப்படுத்தினாலும் கேட்க மறுக்கிறது. அதனால்தான் போராடத் துணிந்துவிட்டோம்'' என்று மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் (MRB - MEDICAL SERVICES RECRUITMENT BOARD) மூலம் பணிக்கு வந்த செவிலியர்கள் கூறுகின்றனர். சென்னை டி.எம்.எஸ்-ஸில் போராடிவரும் செவிலியர்களைச் சந்தித்துப் பேசினோம்...
"மருத்துவத் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 11,000 செவிலியர்கள் இன்னும் பணிநிரந்தரம் செய்யப்படாமல் பணியாற்றிவருகிறோம். கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்வு எழுதி பணியில் அமர்த்தப்படும்போது 'இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்கப்படும்' என்று அறிவித்தார்கள். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தோடு இரண்டு வருடம் முடிந்துவிட்டன. ஆனால், இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அதுமட்டுமல்லாமல், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதுபற்றி அரசிடம் கேட்டுவிட்டோம். ஆனால், இப்போதுவரை எந்தப் பதிலும் அரசு தரப்பிலிருந்து சொல்லவில்லை. MRB தேர்வு எழுதும்போதே 'அவரவர் சொந்த மாவட்டம் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களில் பணிக்குச் செல்லலாம்' என்று விருப்பத் தேர்வில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பணியில் அமரத்தப்படும்போது சுமார் 300, 400 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி உத்தரவிட்டார்கள்.
எங்கள் குடும்பத்தைப் பிரிந்து, கைக்குழந்தைகளைப் பிரிந்து பல நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறோம். ஆனால், எங்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய மறுத்துவருகிறார்கள். இத்தனைக்கும் எங்கள் சம்பளம் ரூபாய் 7000-தான். 7-வது ஊதியக்குழுவில் எங்களது சம்பளத்தை அதிகரித்து தருவதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால், 7வது ஊதியக்குழுவில் அதுபற்றி ஒருவார்த்தைகூடப் பேசவில்லை. இப்போதுள்ள சம்பளத்தை வைத்துக்கொண்டு வெளியூரில் தங்கி சேவை புரிய வேண்டும்; குடும்பத்தையும் பார்க்கவேண்டும். இரவு பகல் பார்க்காமல், எக்ஸ்ட்ரா டைம் எடுத்தும் மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும். இதைப்பற்றி பலமுறை அரசிடம் கேள்வி கேட்டும் பயனில்லை. அதனால்தான் தற்போது இங்கு போராட வந்துவிட்டோம்.
தற்போது நாங்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். MRB தேர்வு எழுதி பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு உடனடியாக பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும். எங்களின் மாவட்டம் அல்லது எங்களுக்கு அருகாமையிலுள்ள மாவட்டத்தில்தான் பணி நியமனம் இருக்க வேண்டும். ரெகுலர் ஸ்டாஃப்களின் வேலைகளையும் எங்கள் தலையில் கட்டிவிடுகிறார்கள். அதனால் எக்ஸ்ட்ரா டைம் எடுத்து வேலை செய்யவேண்டியிருக்கிறது. இதனைக் குறைத்து அனைவரையும் போல எங்களுக்கும் 8 மணி நேரம் மட்டும்தான் பணி வழங்க வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும். இல்லையென்றால், இந்தப் போராட்டம், தொடர் போராட்டமாக மாறும்" என்றனர்.
செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் அரசு!
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
"தேர்வு எழுதியும் பலனில்லை.... பணி இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை..."போராட்டத்தில் குதித்த செவிலியர்கள்!
TAGS :
COMMENTS