[ad_1]
'ஜி.எஸ்.டி வரி தோல்விக்குப் பொறுப்பேற்று, அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும்' என்று பா.ஜ.க மூத்தத் தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி வரி தொடர்பான விவகாரங்களில், மோடி மற்றும் அருண் ஜெட்லியை பா.ஜ.க மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சித்துவந்தார். இந்த நிலையில் தற்போது, 'நிதி அமைச்சர் தலைமையிலான ஜி.எஸ்.டி கவுன்சில் 5 விதமான வரி முறையைக் கொண்டுவந்துள்ளது. இது, பல்வேறு சிக்கல்களை உருவாக்கி விட்டது. இந்த வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டபோதே, இது ஆபத்தையும் தெளிவற்ற நிலையையும் ஏற்படுத்திவிடும் என்று நான் கூறினேன். என்னென்ன சிக்கல்கள் எல்லாம் ஏற்படும் என்பதைத் தீவிரமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால், அதை நிதி அமைச்சர் செய்யவில்லை. ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துவிட்டு, பின்னர் திரும்பப் பெற்றால், அதைத் தோல்வியாகத்தான் கருத முடியும். இப்போது, 177 பொருள்களுக்கு வரிவிகிதத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். இது, நிச்சயமாக அவர்களின் தோல்வியைக் காட்டுகிறது. ஜி.எஸ்.டி வரி முறை சிறப்பான ஒன்று. ஆனால், அதை நடைமுறைப்படுத்தியதில் சிக்கல் உள்ளது. ஜி.எஸ்.டி நடைமுறை, பெரும் குறைகளைக்கொண்டது என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. எனவே, நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி பதவி விலக வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும்! - யஷ்வந்த் சின்ஹா அதிரடி
TAGS :
COMMENTS