[ad_1]
தனியார் நர்சிங் கல்லூரி நிர்வாகி மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரை அடுத்து அந்தக் கல்லூரிக்கு சீல் வைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பரமணியன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் சத்யா என்ற பெயரில் இயங்கி வருகிறது தனியார் நர்சிங் கல்லூரி. இதில் விழுப்புரம் மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் 10 நவம்பர் 2017 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவகலம் வந்து கல்லூரியின் நிர்வாகி கலைமணி மற்றும் அவரது மனைவி சத்யா இருவர் மீதும் புகார் ஒன்றை அளித்தனர். அதில், நர்சிங் பயிற்சி என்ற பெயரில் தங்களை வீட்டு வேலைகளுக்கு அனுப்பி துணி துவைக்கவும், பாத்திரம் தேய்க்கவும் சொல்கிறார்கள் என்றும் அதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி அடித்து கொடுமைப்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தனர். மாணவிகளின் புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனின் நேர்முக உதவியாளர் அனுசுயா தேவி அந்தக் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தும்படி உத்தரவு பிறப்பித்தார். அதையடுத்து கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் மல்லிகா, கள்ளக்குறிச்சி சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ஜெமினி உள்ளிட்ட அதிகாரிகள் அந்தக் கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அந்தக் கல்லூரி அனுமதியின்றி இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அனுமதியின்றி கல்லூரியை இயக்கியக் குற்றத்திற்காக கல்லூரி நிர்வாகி சத்யா உடனே கைது செய்யப்பட்டார். அதேபோல தலைமறைவாகிவிட்ட கலைமணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியின் உத்தரவுப்படி அனுமதி இல்லாமல் இயங்கிய அந்தக் கல்லூரிக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பாலியல் புகார் எதிரொலி..! நர்சிங் கல்லூரிக்கு சீல்..! விழுப்புரம் ஆட்சியர் அதிரடி
TAGS :
COMMENTS