[ad_1]







மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க நடிகர் கமல்ஹாசன் விமானம் மூலம் இன்று காலை கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்.


ஜெயலலிதா மறைவு மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் முதுமை ஆகியவற்றின் காரணமாக தமிழக அரசியல் தற்போது சூடுபிடித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்கப்போவதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனும் அரசியல் களத்தில் இறங்கினார். கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல்ஹாசன் சந்தித்துப்பேசினார். இதனால் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவார் என்று கூறப்பட்டது. மேலும், ஆளும் கட்சிக்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திவருகிறார். அண்மையில், நற்பணி இயக்கத்தினர் தன்னுடன் தொடர்பில் இருக்கும் வகையில் 'மய்யம் விசில்' என்ற செயலியை நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். மேலும், கட்சியை உடனடியாக தொடங்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க கமல்ஹாசன் கொல்கத்தா செல்கிறார். காலை 11.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த கமல்ஹாசன் விமானம் மூலம் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார். மம்தாவை எதற்காக சந்திக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மாநில முதல்வர்களை கமல்ஹாசன் சந்தித்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்