[ad_1]







யுத்தம் முடிந்த பிறகு புலிகள், இயக்கம் சார்ந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் வெளிநாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களை ஒன்றிணைக்கும் பொருட்டு ‘அனைத்துலகத் தொடர்பகம் - தமிழீழ விடுதலைப் புலிகள்’ மற்றும் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் மக்களுக்காக ‘தலைமைச் செயலகக் கட்டமைப்பு’ என்ற அமைப்புகள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில் அந்த இரண்டு அமைப்புகள் இணைந்து செயல்படும் என்று கடந்த 19-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை ‘அனைத்துலகத் தொடர்பகம்’ வெளியிட்டிருக்கிறது.
Chennai: 

அதில், “அனைத்துலகத் தொடர்பகத்துக்கும், தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து ‘தலைமைச் செயலகக் கட்டமைப்பின்’ கீழ் இயங்கிய எமது அமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் கடந்த ஆறு மாதங்களாக ரகசிய பேச்சுவார்த்தை நடந்தது. அதனடிப்படையில் அனைவரும் ஒரே கட்டமைப்பாகச் செயல்பட முடிவெடுத்துள்ளோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறோம்.

இதன் முதல் கட்டமாக ‘தலைமைச் செயலகம்’ என்ற கட்டமைப்பு கலைக்கப்பட்டு, அதில் பணிபுரிந்த அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைத்துலகத் தொடர்பகம் மற்றும் அதன் கிளைகளுடன் இணைந்து செயல்ப்படுவார்கள். 2009 மே 18-க்கு முன்னர் இயங்கியது போலவே இனியும் அனைத்துலகத் தொடர்பகமும் அதன் கிளைகளும் தமது அரசியல் மற்றும் மனிதநேயப் பணிகளை முன்னெடுக்கும். இதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான மாவீரர் நாள் அறிக்கை அனைத்துலக தொடர்பகத்தாலேயே வெளியிடப்படும். தலைமைச் செயலகம் என்ற கட்டமைப்பு கலைக்கப்படுவதால் அதன் பெயரில் இனிமேல் அறிக்கைகள் வெளிவராது.

இதே நேரத்தில் எமது தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் நலன் கருதி ‘அனைத்துலகத் தொடர்பகத்தின்’ முக்கிய பொறுப்புகளுக்கு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை நியமித்திருக்கிறோம். அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.’’

இவ்வாறு அந்த அறிக்கை அனைத்துலகத் தொடர்பகத்தால் வெளியிடப்பட்டிருந்தது.




அனைத்துலகத் தொடர்பகத்தின் இந்த அறிக்கையைப் பற்றி கவிஞர் காசி ஆனந்தனிடம் கேட்டபோது, ‘‘இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. மிகவிரைவில் தமிழீழத்தில் உள்ள தமிழ் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். தலைவர் பிரபாகரன் தலைமையில் இருந்த புலிகளுக்குள் எந்தப் பிளவுகளும் ஒருகாலத்திலும் இருக்கவும் கூடாது... ஏற்படவும் கூடாது. ‘அனைத்துலகத் தொடர்பகம்’ மற்றும் ‘தலைமை செயலகக் கட்டமைப்பு’ இணைப்பு என்பது தமிழீழப் போராட்டத்தின் ஒரு ஒளிமயமான தொடக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ‘அனைத்துலக தொடர்பகம்’ தான் இன்றிருக்கும் போராட்ட வடிவம். தற்போது ‘அனைத்துலக தொடர்பகத்தோடு’, ‘தலைமை செயலகக் கட்டமைப்பு’ இணைந்து செயலப்படுவது மிக நல்ல ஆரம்பம். இது விடுதலை போராட்டத்தை மேலும் வலிமைப்படுத்தும்” என்றார்.
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்



!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");