[ad_1]







யுனிக் வேல்டு ரெக்கார்டு மற்றும் பியூட்டி கனெக்ட் நிறுவனம் இணைந்து மேக்-அப் போடுவதில்  உலக  சாதனை படைக்க முயற்சி எடுத்து வருகிறது.


சென்னையில் நடைபெறவிருக்கும் பிரமாண்ட உலக சாதனைக்கு தற்போது 3 கட்ட போட்டியில் முதல் கட்ட போட்டிக்கான தேர்வை தற்போது துவங்கியுள்ளது. இந்த சாதனைக்காக, மதுரை பாப்பீஸ் ஹோட்டலில் நடைபெற்றது போலவே தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்த்து இன்னும் 5 இடங்களில் நடத்த உள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று, மதுரையில் நடைபெற்ற போட்டியில் ஒன்றரை மணி நேரத்தில் மேக்-அப் செய்ய வேண்டும் என்ற நேர வரையறையில், 20 பெண்களும் அவர்களோடு மேக்-அப் செய்யும் பெண்களும் பங்கேற்றனர்.


மேலும் இது குறித்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மனோ அவர்கள் கூறுகையில், ``தற்போது மதுரையில் நடைபெறும் போட்டில் குவார்ட்டர் ஃபைனல். இதில் 20 முதல் 25 பேர் பங்கேற்று தங்களது ஒப்பனைக் கலையை நிரூபிக்கவிருக்கின்றனர். இந்த ஒன்றரை மணி நேரப் போட்டியில் வெற்றிபெறும் பெண்கள் அடுத்ததாக நடைபெறும் ஒரு மணிநேர போட்டிக்குத் தகுதி பெறுவர். இது செமி பைனலாகும். மேக்-அப்-ஐ எவ்வளவு விரைவாகவும், நேர்த்தியாகவும் செய்கிறார்கள் என்ற அளவுகோலின் அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு பெறுவர். இறுதிப் போட்டியில் இந்த கால அளவு மேலும் குறைக்கப்பட்டு அரை மணி நேரத்தில் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும். இந்த இறுதிப்போட்டி உலக சாதனை முயற்சியாக நடைபெறும். இந்தப் போட்டியின் பெயர் 'ஃபாஸ்ட் ஃபிங்கர் 2017' என்பதாகும். உலகம் முழுவதும் நடைபெறுகின்ற இந்தப் போட்டியில் முதல் பத்தாயிரம் பேர் வெற்றியாளர்களாகத் தேர்வு பெறுகின்றனர். இதில் வெற்றி பெறுகின்ற நபர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கமும், 50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நாணயமும் பரிசாக வழங்கப்படும். இந்தப் போட்டியில் இதுவரை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்'' என்றார். மேலும் மேக் அப் உமன்கள் கூறுகையில், ``இந்தப் போட்டி மிகவும் வித்தியாசமானது. எங்களைப் போன்ற கலைஞர்களை ஊக்குவிக்கும் செயலாகும். மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சிவகங்கை உள்ளிட்ட பகுதியில் இருந்து போட்டியில் பங்கேற்க உற்சாகமாக வந்துள்ளோம்'' என்றனர் உறாசகமாக.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");