[ad_1]
பசும்பொன் தேவர் நினைவிடத்திலுள்ள அவரது சிலைக்கு சாற்றப்பட்ட தங்கக் கவசம், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
பசும்பொன் தேவர் நினைவிடத்திலுள்ள அவருடைய சிலைக்கு, 13 கிலோ எடையில் தங்கக் கவசம் மற்றும் கிரீடத்தை, கடந்த 2014 -ம் ஆண்டு ஜெயலலிதா வழங்கினார். குருபூஜை நடக்கும் ஐந்து நாள்களைத் தவிர மற்ற நாள்களில், மதுரை பேங்க் ஆஃப் இந்தியா லாக்கரில் வைக்கப்படும். இதற்கு, தேவர் நினைவிடக் காப்பாளர்கள், அ.தி.மு.க பொருளாளர் ஆகியோர் பொறுப்பாவார்கள்.
அ.தி.மு.க இரண்டு அணிகளாகி, எடப்பாடி அணியில் பொருளாளர் யாரும் நியமிக்கப்படாததால், இந்த ஆண்டு கவசத்தை வாங்கவந்த ஓ.பி.எஸ்ஸிடம் வங்கி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை.
டி.டி.வி தரப்பு, தாங்கள்தான் அ.தி.மு.க, தங்கள் பொருளாளர் ரங்கசாமி மூலம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கிக்கு கடிதம் அனுப்பினார்கள். இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி, மதுரை ஆட்சியர் மூலம் தங்கக்கவசம் ஒப்படைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுக்காமல் ஆட்சியர் மூலம் கொடுத்ததை டி.டி.வி.தினகரன் தரப்பினர் கொண்டாடினார்கள். இந்த நிலையில் குருபூஜை முடிந்து இன்று பசும்பொன்னிலிருந்து தங்கக்கவசம் பாதுகாப்பாக மீண்டும் மதுரை வங்கிக்குக் கொண்டுவரப்பட்டது. இதனால், தேனியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளைப் பார்க்கவந்த ஓ.பன்னீர்செல்வம், அதை ரத்துசெய்துவிட்டு உடனே மதுரைக்கு வந்தார். அதற்குள், வங்கி முன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கூடிவிட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் கூடி, இருவரும் மாறி மாறி சலசலப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தார்கள். அதற்குள் மாவட்ட ஆட்சியரும் வங்கிக்கு வந்துவிட, வங்கி அதிகாரிகள் விரைவாக நடைமுறைகளை முடித்து லாக்கரில் கவசத்தை வைத்தார்கள். ஓ.பி.எஸ், அமைதியாக திரும்பிச்சென்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தேவர் தங்கக் கவசம் வங்கியில் ஒப்படைப்பு! ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடையே சலசலப்பு
TAGS :
COMMENTS