[ad_1]





கோவை மாநகரின், 27 வது போலீஸ் கமிஷனராக, பெரியய்யா இன்று பதவியேற்றுக்கொண்டார்.


 


கோவை போலீஸ் கமிஷனராக இருந்த அமல்ராஜ் கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, புதிய கமிஷனராகப் பெரியய்யா நியமிக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியய்யா, கடந்த 1982-ம் ஆண்டு தொடங்கி 1988-ம் ஆண்டு வரை கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

அப்போது, கல்லூரியின் ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்த அவர், கோவை மாவட்டக் கால்பந்து அணியிலும் விளையாடியுள்ளார். தொடர்ந்து கடந்த 1989-ம் ஆண்டு காவல் துறையில் டி.எஸ்.பி-யாகப் பணிக்குச் சேர்ந்த அவர், 1997-ம் ஆண்டு, ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அவர், சென்னை பெருநகர கூடுதல் கமிஷனராகப் (போக்குவரத்து) பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், பெரியய்யா இன்று காலை, கோவை மாநகர போலீஸ் கமிஷனராகப் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பெரியய்யா, 'நான் கோவையை நன்கு அறிந்தவன். கல்லூரிப் படிப்பை இங்குதான் முடித்தேன். கோவை என்னை வளர்த்தெடுத்த ஊர். இந்த ஊரின் அமைதிக்குப் பல்வேறு திட்டங்களை வகுப்பேன்.




மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் குற்றச் சம்பவங்களைக் குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதோடு, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, மாநகராட்சி மற்றும் பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.காவல்துறையின் நற்செயல்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");