[ad_1]
Chennai: குற்றவாளிகள் நாடாளக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். அரசியல் மற்றும் மக்கள் பிரச்னைகள் தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை கமல் சந்தித்து பேசினார். தன் ரசிகர்களையும் சமீபத்தில் சந்தித்தார். அப்போது புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என்று கமல்ஹாசன் அறிவித்தார். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் சமீபத்தில் பேசியிருந்தார் கமல்ஹாசன்.இந்நிலையில், கமல்ஹாசன் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்” என்று கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'குற்றவாளிகள் நாடாளக் கூடாது'! கமல்ஹாசன் பாய்ச்சல்
TAGS :
COMMENTS