[ad_1]
காங்கிரஸ் கட்சியின் அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான காரியக் கமிட்டிக் கூட்டம் நாளை சோனியா காந்தி இல்லத்தில் கூடுகிறது.
குஜராத் சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, ஆளும் பி.ஜே.பி-யும், காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தீவிரமாக உள்ளார். மத்திய அமைச்சர்கள் பலரும் குஜராத்தில் முகாமிட்டு, பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவருகிறார்.
இந்நிலையில் குஜராத் தேர்தலுக்கு முன்பே ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சு நிலவி வந்த நிலையில், அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் கூட்டம் நாளை நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவருக்கான தேர்தல் தேதி உறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும். அடுத்ததாகக் கட்சியில் தலைவர் பதவிக்கு ஒரே வேட்பாளராக ராகுல் தேர்வு செய்யப்பட்டு ஒரு மனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ராகுலுக்கு தலைவர் பதவி?- நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி
TAGS :
COMMENTS