[ad_1]
எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்துவிட்டதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினரான சவுந்திரராஜன் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாவட்ட மாநாடு நெல்லையில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான அ.சவுந்திரராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ’’பிப்ரவரி மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக மாவட்ட மாநாடுகளை நடத்தி வருகிறோம். அகில இந்திய மாநாடு ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
மத்திய அரசு, ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு என அனைத்து அம்சங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. அதை மறைக்க வகுப்புவாதம், மத வெறியைத் தூண்டிவிட்டு வருகின்றனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மத வெறியைத் தூண்டி தோல்வியை மறைக்க மத்திய அரசு முயல்கிறது. மத்தியில் ஆளும் அரசைக் குறை கூறுபவர்களையும் குற்றங்களைச் சுட்டிக் காட்டுபவர்களையும் கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகின்றனர். `தீக்கதிர்' ஆசிரியரே மிரட்டப்படுகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களையெல்லாம் அவரது பெயரில் செயல்படுவதாகச் சொல்லும் தற்போதைய ஆட்சியாளர்கள் ஆதரித்து வருகின்றனர். மாநில உரிமைகள் பறிபோய், மாநில வளங்களும் பறிபோய் உள்ளன அதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. மாநிலத்தில் உள்ள தொழில் வளங்கள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. மத்திய அரசின் இசைக்கு மாநில அரசு தாளம் போடுகிறது.
இரட்டை இலை எடப்பாடி பழனிசாமி அணிக்குக் கிடைத்ததும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இப்போது தேர்தல் ஆணையம் விதிக்கும் ஒவ்வொரு கட்டுப்பாடும் ஜனநாயகத்தை பாதிப்பது போல உள்ளது. அவர்களின் புதிய விதிமுறைகள் மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து வரும் 30-ம் தேதி கோவையில் நடைபெறும் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
இலை கிடைத்து விட்டதால் இடைத்தேர்தல் வந்துவிட்டது: மார்க்சிஸ்ட் கிண்டல்!
TAGS :
COMMENTS