[ad_1]





கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில், 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதயன், தீபு, சதீஷ், மனோஜ் மற்றும் பிஜின் ஆகியோர் மீதுதான் குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது. ஜூன் 17-ம் தேதி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இந்த ஐவர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீதான குண்டர் சட்டம், இன்று நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டது. குண்டர் சட்டத்துக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட மனுமீது நீலகிரி ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 






மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக கொடநாட்டில் எஸ்டேட் உள்ளது. அந்த எஸ்டேட்டில், காவலாளியாகப் பணிபுரிந்த ஓம்பகதூர், ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட கார் டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது கூட்டாளியான சயன் என்பவரும் சாலை விபத்தில் காயமடைந்தார். இதுதொடர்பாக, காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இதையடுத்துதான், உதயன், தீபு, சதீஷ், மனோஜ் மற்றும் பிஜின் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டம் போடப்பட்டது. 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்