[ad_1]





Tiruppur: 

மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தமிழகத்தில் ஏழைகளின் உணவைப் பறித்து, பட்டினிச் சாவில் தள்ளும் செயலை மேற்கொண்டிருப்பதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி தெரிவித்திருக்கிறார்.



"உணவு, வேலை எங்கள் உரிமை!" என்ற கோரிக்கையை முன்வைத்து திருப்பூரில் இன்று அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி பேசியபோது, "பனியன் தொழிலில் திருப்பூர் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. மத்திய அரசின் பண மதிப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்றவையால் சிறு, குறு தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற நெருக்கடிகளால் பாதிப்படைந்துபோன ஏழை உழைப்பாளி மக்களின் ரேசன் உணவுப் பாதுகாப்பையும் பறிக்கின்றனர்.உணவு உரிமைச் சட்டம் அனைவருக்கும் உணவு என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்களின் கொள்கைகள், ஏற்கெனவே இருக்கும் உணவுப் பாதுகாப்பை பாழ்படுத்தும் வகையில்தான் இருக்கிறது. ஏழை மக்களின் உணவு மற்றும் வேலை உரிமைகளைப் பறிப்பதற்கு, மத்திய பா.ஜ.க அரசும் மாநிலத்தை ஆளும் எடப்பாடி அரசும் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகளே காரணம். சர்க்கரையின் விலையை உயர்த்திவிட்டு, அரசி, மண்ணெண்ணெய் போன்றவை குறைத்துவிட்டனர். பணக்காரர்களுக்கு வரி விதித்து, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டிய அரசு, பெரு முதலாளிகளின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி வரை கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, ஏழைகளின் உணவு, வேலை உரிமையைப் பறிக்கின்றனர். எனவே, இந்த ஆட்சியாளர்களின் கொள்கைகள் மாறினால் மட்டுமே, ஏழை மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும்'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");