[ad_1]





கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தான் கூறியது என்ன என்பது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார். 





நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபகாலமாக அன்றாட அரசியல் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையின்போது பிரதமர் நரேந்திர மோடியை, பிரகாஷ் ராஜ் விமர்சித்து இருந்தார். இதனால், பா.ஜ.க தலைவர்கள் பலரும் பிரகாஷ் ராஜுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், சினிமா மூலம் மக்களிடம் பிரபலமடைந்துவிட்டோம் என்ற ஒரே காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. அப்படியானால் அது பேரழிவாகவே அமையும். நாடும், நாட்டு மக்களும் சந்திக்கும் பிரச்சினைகளை உரிய கண்ணோட்டத்துடன் அணுகி, நாட்டு மக்களின் நம்பிக்கையை அவர்கள் பெற வேண்டும். ரசிகர்கள் என்ற அடிப்படையில் யாருக்கும் வாக்களிக்கக் கூடாது. நாட்டின் குடிமகன் என்ற முறையில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

முன்னதாக, ’நான் எந்த அரசியல் கட்சியிலும் இணையமாட்டேன். நடிகர்கள் அரசியல் கட்சியில் இணைவதையும், புதிய அரசியல் கட்சி தொடங்குவதையும் நான் விரும்புவதில்லை. ஏனென்றால், நடிகர்கள் வெறும் நடிகர்கள் மட்டும் தான். அவர்களுக்கு என்று சில ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது. நடிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து விழிப்புடன் இருப்பது அவசியம். நடிகர்கள் அரசியல் தலைவர்கள் ஆவது நாட்டுக்கு மிகப்பெரும் பேரழிவு. தியேட்டரில் தேசியகீதத்துக்கு எழுந்து நின்று தான் தேசப்பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை’ என்று பிரகாஷ் ராஜ் கூறியதாக செய்திகள் வெளியாகின. நடிகர்கள் அரசியலுக்கு வருவது பேரழிவு என்ற கோணத்தில் கூறியதாக வெளியான தகவலை மறுத்து அவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். 



 


 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்