[ad_1]
தமிழகத்தில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், விடுமுறை அறிவித்துள்ளார்.
அக்டோபர் மாதம் 27-ம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. அன்றிலிருந்தே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துவந்தாலும், கடந்த ஒரு வாரமாக தமிழகக் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால், கடந்த ஒரு வாரமாகவே கடலோர மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து, பெரும்பான்மையான பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தொடர் கனமழை: நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
TAGS :
COMMENTS