[ad_1]
நாகை மாவட்டம் மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு திருமாவளவன் தலைமையில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த அக்டோபர் 27-ம் தேதி மயிலாடுதுறைக்குத் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வந்தார். அப்போது, அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கருப்புக்கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். உடனே, அருகில் இருந்த காவல் துறையினர் கருப்புக்கொடி போராட்டத்தில் கலந்துகொண்ட ஐந்து பேரை கைதுசெய்து போலீஸ் வேனில் ஏற்றினர். போலீஸ் பாதுகாப்பில் இருக்கும்போதே அவர்கள் மீது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலர் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்தச் சம்பவத்தை கண்டித்து இன்று மாலை மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், 'மத்தியில் ஆளும் மதவாத கட்சியான பி.ஜே.பி. ஒருபோதும் தமிழ்நாட்டில் கால்லூன்ற முடியாது. பி.ஜே.பி. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி வைத்தாலும் அந்த கட்சியை விடுதலை சிறுத்தைகள் எதிர்க்கும். மக்களை முட்டாளாக்கும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த நடவடிக்கை நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவில்லை. நாங்கள் பி.ஜே.பி. கட்சித் தலைமைக்குதான் எதிரிகளே ஒழிய அதன் தொண்டர்களுக்கு அல்ல. பி.ஜே.பி. தொண்டர்களுடன் மோதல் நடடிவக்கையை விரும்பவில்லை. தலைமையோடுதான் மோதுகிறோம் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்' என்றார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பண மதிப்பு நீக்கம் மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கை..! திருமாவளவன் ஆவேசம்
TAGS :
COMMENTS