[ad_1]
Chennai: டாஸ்மாக் மதுபானங்களில் வேதிப்பொருள்கள் கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுபானங்களின் தரத்தை ஆராய உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசே மதுபானங்களை விற்பனை செய்துவருகிறது. மதுபானங்களைத் தனியார் நிறுவனங்களிடமிருந்து டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல்செய்து, கடைகளுக்கு அனுப்பிவைக்கிறது.டாஸ்மாக் கடைகளில் விற்பனைசெய்யப்படும் மதுபானங்களின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால், அதுபற்றிய ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீராமன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். மதுபானங்களில் வேதிப்பொருள்களை கலப்பதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு 17 மதுபான ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், தமிழக உணவுப் பாதுகாப்பு ஆணையர், மதுபான ஆலைகளுக்கு நேரில் சென்று மதுபானங்களின் தரம்குறித்து ஆய்வு நடத்த வேண்டும்; அதுபற்றிய அறிக்கையை டிசம்பர் 22-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
வேதிப்பொருள்கள் கலப்பதாகப் புகார்..! டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆராய நீதிமன்றம் உத்தரவு
TAGS :
COMMENTS