[ad_1]

ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷனில், வரும் 22-ம் தேதி ஆஜராகுமாறு தி.மு.க-வின் மருத்துவ அணியின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் சரவணனுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்குறித்து அ.தி.மு.க கட்சியினராலும், பொதுத் தளத்திலும் பல்வேறு சந்தேகங்கள் எழும்பியதால், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமயிலான விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்தது. ஜெயலலிதாவின் மரணம்குறித்த தகவல்களைத் தங்களுக்கு அனுப்பலாம் என்று கமிஷன் அறிவிப்பு வெளியிட்டதால்,  பல தரப்பிலிருந்தும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுவருகின்றன.




இந்த நிலையில் தி.மு.க மருத்துவ அணியின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் சரவணன், பல்வேறு சந்தேகங்களை எழுப்பி, மனு ஒன்றை கமிஷனுக்கு அனுப்பிவைத்தார். இவர் ஏற்கனவே, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளரை அங்கீகரித்து தேர்தல் படிவத்தில் ஜெயலலிதாவால் வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட கைரேகையில் சந்தேகம் தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்ந்த் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், விசாரணை கமிஷனுக்கும் மனு அனுப்பியபோது பரபரப்பு ஏற்பட்டது. இவரின் மனுவை ஏற்றுக்கொண்ட விசாரணைக் கமிஷன், உரிய ஆவணங்களுடன் வரும் 22-ம் தேதி சென்னையில் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பியுள்ளது. 


 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");