[ad_1]







எம்.ஆர்.பி செவிலியர் நலச் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 


மருத்துவப் பணியாளர் பணிநியமன வாரியம் ( Medical Recruitment Board) மூலம் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 11,000 செவிலியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள், தர வரிசை மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பணிநியமனம் செய்யும்போதே, நிரந்தர அடிப்படையில் நியமிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் அரசு நியமித்துள்ளது. அவர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கான ஊதியம், சலுகை போன்றவற்றையும் வழங்கவில்லை. வெறும் 7,700 ரூபாய் மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. நிரந்தர செவிலியர்களுக்கான பணியிடங்கள் காலியாகும்போது மட்டுமே இச்செவிலியர்களுக்கு பணிநிரந்தரமும், காலமுறை ஊதியமும் வழங்கப்படுகிறது. பணிநிரந்தரம் பெறுவதற்காக 7 முதல் 8 ஆண்டுகள் வரை காத்திருக்க நேரிடுகிறது.

அதுவரை இச்செவிலியர்களுக்கு ஆண்டுக்கு 500 ரூபாய் மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இது, அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். எம்.ஆர்.பி மூலம் மருத்துவர்களைப் பணி நியமனம் செய்யும்போதே, அவர்களுக்கு  நிரந்தர மருத்துவர்களுக்கு உரிய ஊதியம், படிகள் உள்ளிட்டவற்றை அரசு வழங்குகிறது. எம்.ஆர்.பி மூலம், நான்கு மாதங்களுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட  2,800 கிராம சுகாதாரா செவிலியர்களுக்கு, பணி நியமனத்தின்போதே காலமுறை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. லேப் டெக்னீஷியன், டார்க் ரூம் உதவியாளர், ஆண் மற்றும் பெண் செவிலியர் உதவியாளர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் இதர மருத்துவத் துறை ஊழியர்களுக்கும், எம்.ஆர்.பி மூலம் பணி நியமனம் செய்யப்பட்டபோதே காலமுறை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. செவிலியர்களுக்கு அவ்வாறு வழங்காதது பாரபட்சமானது. குறைந்த ஊதியத்தில், செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டும் உள்நோக்கம் கொண்டதாகும். இது, கடும் கண்டனத்துக்குரியது.
 
எனவே, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் செவிலியர்களுக்கும் உடனடியாக பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். உடனடியாக காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். செவிலியர்களைப் பணிநியமனம் செய்யும்போதே, நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஒப்பந்த முறை, தற்காலிக முறை, வெளிக்கொணர்தல் முறையில் செவிலியர்களைப் பணிநியமனம் செய்யக்கூடாது. எட்டு மணி நேர வேலை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 1.11.17 முதல் 7.11.17 வரை கறுப்புப் பட்டை அணிந்து செவிலியர்கள் பணிக்குச் சென்றனர். ஆனால், அரசு இவர்களை அழைத்துக்கூடப் பேசவில்லை. இந்நிலையில் தவிர்க்க முடியாத சூழலில், இன்று (16.11.2017) முதல் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபடுகின்றனர். செவிலியர்கள் போராட்டத்தை காவல்துறைமூலம் ஒடுக்க நினைப்பதைக் கைவிட்டு, பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காண வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.



 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");