[ad_1]





கலெக்டர் மதிவதனியாக நயன்தாரா நடித்திருக்கும் திரைப்படம் 'அறம்'. கோபி நயினார் இயக்கத்தில் வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பாஸிட்டிவ் ரிசல்ட் கிடைத்திருக்கிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமன்றி பிரபலங்களும் தங்களது, பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் அறம் படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் ரஞ்சித், 'அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி. கற்பி ஒன்று சேர் போராடு. இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கும், தோழர் நயன்தாரா அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்’ என்று பதிவிட்டிருந்தார். 




இயக்குநர் கோபி நயினாரின் பெயரை ரஞ்சித் குறிப்பிடாதது குறித்து சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் ரஞ்சித் தரப்பிலிருந்து எந்த பதிலும் வராத நிலையில் 'அறம்' படத்தின் இயக்குநர் கோபி நயினார் ஒரு வேண்டுகோளை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களுக்கு விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’இயக்குநர் ரஞ்சித்தும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள். ஆனால் சில நலன்விரும்பிகள் அன்பின் மிகுதியால் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து வருகின்றனர். இது ஆரோக்கியமான சூழலல்ல. 

தோழர்களே! படைப்பிற்கான விமர்சனங்களை வரவேற்கிறேன். நானும், இயக்குநர் ரஞ்சித்தும் இந்தச் சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும், கடமைகளும் ஏராளம் இருக்கின்றன. குறிப்பாக நாங்கள் இருவரும் ஒருமித்துச் செயல்பட வேண்டிய கட்டாயமும் கூட. அப்போதுதான் இந்த பலம் எல்லோரையும் ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமையக் கூடும். 

ஆதலால், உறவுகளைச் சிக்கல் ஆக்குகின்ற எந்தவொரு பதிவுகளையும் நான் அனுமதிக்க மாட்டேன். நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவருத்தத்தை தந்திருந்தால் அவர்களுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");