[ad_1]
சாதிரீதியான மோசமான கருத்துகளை பொதுஇடங்களில் போனில் தெரிவித்தாலும், அது குற்றமே என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிரீதியாக போன் மூலம் மோசமாகப் பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்பேரில் முதல் தகவலறிக்கைப் பதிவுசெய்யப்படவே, அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அந்த நபர் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த முதல் தகவலறிக்கையை ரத்து செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து அந்த நபர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் செலமேஸ்வர் மற்றும் அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான விவேக் விஷ்னோய் என்ற வழக்கறிஞர், சம்பவ நடந்தபோது புகார் அளித்த பெண்ணும், தனது கட்சிக்காரரும் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகவும், போன் மூலமே பேசிக்கொண்டதாகவும் வாதாடினார். அதனால், அவர் மீது பதிவுசெய்யபப்ட்ட முதல் தகவலறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்று வாதடினார். ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், சாதிரீதியாக மோசமான கருத்துகளைப் போனில் தெரிவித்தாலும் குற்றமே என்று உத்தரவிட்டனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சாதிரீதியான மோசமான கருத்துகளைப் பொதுஇடங்களில் போனில் தெரிவித்தாலும் குற்றமே! உச்ச நீதிமன்றம் உத்தரவு
TAGS :
COMMENTS