[ad_1]
இறைவன் உறையும் கோயிலில் நடைபெறும் விசேஷங்கள், சில முக்கிய நாள்களில் நடத்தப்படும் திருவிழாக்கள் என நம் பாரம்பர்யம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளுமே ஏதோ ஒரு நோக்கத்துக்காக உளபூர்வமாக நடத்தப்படுபவை. அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் பக்தர்கள் பெருந்திரளாகக் கூடுவார்கள். சுயநலம் சார்ந்த காரணங்களாக இருப்பினும், `இறை பக்தி’ என்கிற அற்புதம் அனைவரையும் ஒன்று சேர்த்துவிடும். ஆனால், அந்த பக்திபூர்வமான விழாக்கள் இப்போதெல்லாம் சர்ச்சைக்குள்ளாவது வாடிக்கையாகிவிட்டன.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருக்கும் துலாக்கட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும், ஐப்பசி மாத இறுதியில் கடைமுழுக்கு தீர்த்தவாரி கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்துக்கான கடைமுழுக்கு திருவிழா நேற்று (நவம்பர் 16) அதிகாலையில் தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவுக்கான கொடியேற்றம் கடந்த 7-ம் தேதி ஏற்றப்பட்டது. அதன்பிறகு கடந்த 13-ம் தேதி மயூரநாதர் திருக்கல்யாணமும், 15-ம் தேதி திருத்தேர் பவனியும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஐப்பசி 30-ம் தேதியான நேற்று (நவம்பர்-16) கடைமுழுக்குத் திருவிழா நடைபெற்றது. இது மிக முக்கியமான விழா. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள். ஆனால் விழாவின் சிறப்பம்சமே துலாக்கட்டத்தில் முழுக்குப் போடுவதுதான். ஆனால், சிலர் மட்டுமே துலாக்கட்டத்தில் இறங்கி நீராடினார்கள். அதற்குக் காரணம் அசுத்தமாக இருந்த நீர்தான்.
காவிரி துலாக்கட்டத்தில் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை `காவிரி மகா புஷ்கரம்’ திருவிழா நடைபெற்றது. அதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் குளத்தில் இருந்த பழையநீரில்தான் நேற்றைக்கு கடைமுழுக்கு நீராடல் நடைபெற்றது. கடைமுழுக்குக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் அதிகம் செய்யப்படவில்லை. தற்காலிகக் குளத்தில் இருந்த நீரும் மாற்றப்படவில்லை. இதனால் பல பக்தர்கள் குளத்தில் இறங்கவே முகம் சுளித்தார்கள். நீராட வந்திருந்த பல பக்தர்கள் தங்கள் உடல்நலத்தை கருதி, அந்த அசுத்த நீரில் நீராடாமல் காவிரித் தாயை மட்டும் தரிசித்து வணங்கிவிட்டுச் சென்றார்கள்.
நேற்று மதியம் சரியாக 1:30 மணியளவில் தருமபுரம் ஆதீனமும், திருவாடுதுறை ஆதீனமும் சேர்ந்து காவிரியில் தீர்த்தவாரி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தருமபுரம் ஆதீனம் சரியாக மதியம் 1:30 மணிக்கு வந்துவிட்டார். ஆனால் திருவாடுவதுறை ஆதீனம் மதியம் 2:40 மணிக்குத்தான் வந்தார். இறைவனுக்குச் செய்யப்படும் ஆகம முறைகள் குறித்த நேரத்தில் செய்யப்படுவதே சரியானது. எனவே, திருவாவடுதுறை ஆதீனம் காலம் தாழ்த்தி வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற `மகா புஷ்க’ரத்தின்போதும் தீர்த்தவாரி தருவதற்கு குறிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னரே வந்திருந்தார் திருவாடுதுறை ஆதீனம். தருமபுரம் ஆதீனம், காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்கள் இல்லாததால் தானே தன்னிச்சையாக தீர்த்தவாரி கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அதேபோல் மீண்டும் நிகழ்ந்திருப்பதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். அவர்கள் கேள்வியெல்லாம் `இறைவனுக்குச் செய்யக்கூடிய ஆகம விதிகளை ஆதினங்களே மீறலாமா?’ என்பதுதான்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
இறைவனுக்கான ஆகம விதிகளை ஆதீனங்களே மீறலாமா?
TAGS :
COMMENTS