[ad_1]





எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வந்த பயனாளி மாரடைப்பால் மரணமடைந்தது காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.




சிவகங்கையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவில் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பெற பல்வேறு பகுதிகளிலிருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். காரைக்குடியை அடுத்த வேட்டக்காரன்பட்டியைச் சேர்ந்த சுப்பையா (50) என்பவரும் அவர்களுள் ஒருவர். இந்தநிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்குச் செல்லும் பேருந்தில் ஏறும்போது சுப்பையா தவறி விழுந்தார். இதையடுத்து, அவரை காரைக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழந்தார். 

ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் சுந்தர், சுப்பையா என இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு முதலமைச்சர் அளிக்க இருந்த நலத்திட்டங்களைப் பெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுள் இவரும் ஒருவர். இதுகுறித்து காரைக்குடி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். வேட்டக்காரன்பட்டி கிராமத்தில் சுப்பையாவின் இறப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");