[ad_1]





Thoothukudi: தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரத்தில், சேதமடைந்த சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால், ஊர்மக்கள் அந்தச் சாலையில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகிலுள்ளது, விட்டிலாபுரம். நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் விட்டிலாபுரம் – மணக்கரை சாலை உள்ளது. சுமார் 3 கி.மீ தூரம் வரை உள்ள இந்தச் சாலையை, 10 கிராம மக்கள் பயன்படுத்திவருகின்றனர். இப்பகுதியிலுள்ள செங்கல் சூளைகளுக்குச் செல்லும் லாரிகள், டவுன் பஸ், தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் என தினமும் சுமார் 150 வாகனங்கள் வந்துசெல்லும் முக்கியச் சாலையாக உள்ளது. கடந்த ஆண்டு, கூடங்குளம் கூட்டுக்குடிநீர் திட்டம் இப்பகுதியில் அமைக்கப்பட்டபோது, நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் குழிதோண்டி பைப்லைன்கள் போடப்பட்டன. இப்பணி முடிவடைந்தும் தற்போது வரை சாலை அமைக்கப்படவில்லை என்பதால், ஊர்மக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தை  நடத்திய கருங்குளம் ஒன்றிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தலைவி குணேஸ்வரி, ‘’ குடிநீர் திட்டப் பணிகள் துவைங்கும்போதே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டோம். ‘’குடிநீர் திட்டப்பணிகள் திட்டம் துவங்கியபோதே, சாலை சீரமைப்புக்காக நெடுஞ்சாலைத் துறைக்கு வடிகால்வாரியம் சார்பில் பணம் கட்டப்பட்டுவிட்டது. திட்டப்பணிகள்முடிவடைந்ததும் சாலை அமைக்கும் பணி துவங்கும்’’ எனக் கூறினார்கள். ஆனால், இத்திட்டப்பணிகள் முடிவடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை.


இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.  இதனால் குண்டும் குழியுமான சாலைகளில் சமீபத்தில் பெய்த மழையால் குளம் போலக் காட்சியளிக்கிறது. இதைக் கண்டித்தும், சேதமடைந்த சாலையை விரைவில் சீரமைக்கவும் வலியுறுத்தி சேதமடைந்த சாலையில் ஊர்மக்களுடன் இணைந்து நாற்றுநடும் போராட்டம் நடத்தினோம்’’ என்றார். போராட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.    
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");