[ad_1]

கர்நாடக மாநிலம், கனகபுரா அடுத்துள்ள தொட்டமரலவாடி கிராமம் அருகே கர்நாடக அரசு பேருந்தும், தனியார் பள்ளி வாகனமும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கி நொருங்கிப்போனது. நொருங்கிப்போன பள்ளி பேருந்தில் இருந்து பள்ளி குழந்தைகளை மீட்பதில் பெரும் சிக்கல் எற்பட்டுவிட்டது. அரசு பேருந்தில் வந்த பயணிகளே பள்ளி வாகனத்தில் சிக்கிக்கொண்ட மாணவர்களை மீட்டனர்.





இந்த விபத்தில் பள்ளி வாகனமும், பள்ளி மாணவர்களுமே அதிகம் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 8 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் மூன்று மாணவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அவர்கள் அவரச சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விபத்தில் படுகாயம் அடைந்த சரன் வயது 7, சிகிச்சை பலனின்றி இறந்துபோனான். பள்ளி மாணவர்களின் பேருந்து விபத்திற்குள்ளான சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து ஆருபள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.