[ad_1]





Chennai: திமுக, அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ்,‘ கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன. தமிழக அரசின் கோடிக்கணக்கான ரூபாய் கடன் மற்றும் அதற்கான வட்டி காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி முடங்கிவிட்டது. தமிழக அரசு திவால் ஆகிவிட்டது. அதற்கு முதல்வர் தேவையா? எனவே திராவிட கட்சிகளுக்கு  மாற்றாக பா.ம.க. தலைமையில் கட்சிகள் இணைய வேண்டும். ஆனால் பா.ஜ.க.வுக்கு அழைப்பில்லை’ என்றார்.  



 

ஊழல் கட்சிகள் என்று நீங்கள் கூறும் திமுக அதிமுக கட்சிகளுடன் இரண்டு முறை கூட்டணி வைத்திருக்கிறீர்களே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘ஊழல் கட்சிகளான திமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்தற்காக மக்களிடம் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டேன்” என்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் சிரித்துவிட்டு சென்றார்.
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");